Monday, March 20, 2006

பூமியின் காந்த வட துருவமும் இடம்பெயர்வும்

சான் பிரான்சிஸ்கோ, டிச. 10: பூமியின் காந்த வட துருவம் இன்னும் 50 ஆண்டுகளில் சைபீரியாவுக்கு இடம் பெயரக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காந்த துருவம் இடம் பெயர்கிறது என்பதை நீண்ட நாள்களாக விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். ஆனால் அது ஏன் இடம் பெயர்கிறது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. பூமியின் காந்த பாதுகாப்பு கவசத்தின் வலிமை கடந்த 150 ஆண்டுகளில் 10 சதவீதம் குறைந்திருப்பது முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில், காந்த வட துருவமானது ஆர்க்டிக் பகுதியில் சுமார் 1,102 கி.மீ. தொலைவுக்கு அங்கும் இங்கும் நகர்ந்து அலைந்திருக்கிறது என்கிறார் ஒரேகான் பல்கலைக்கழக புவிகாந்தவியல் நிபுணர் ஜோசப் ஸ்டோனர். இதன்படி பார்த்தால், இப்போது கனடாவின் வட பகுதியைச் சேர்ந்த அலாஸ்காவில் அமைந்துள்ள காந்த வட துருவம், இன்னும் 50 ஆண்டுகளில் சைபீரியாவுக்கு நகர்ந்து செல்லக் கூடும். அலாஸ்காவில் அமைந்துள்ள பூமியின் காந்த வட துருவப் பகுதி முதன் முதலில் 1831-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1904-ல் அப் பகுதியை விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய்ந்தபோது, அது முதலில் இருந்த இடத்தில் இருந்து 50 கி.மீ. நகர்ந்திருப்பது தெரியவந்தது.

2 comments:

Sivabalan said...

மிக நல்ல பதிவு!! நன்றி !!

Suban said...

நன்றி சிவபாலன்