Wednesday, May 10, 2006

சந்திரனுக்கு செல்லும் முதலாவது இந்திய செயற்கை கோள்

சந்திரனுக்கு 2008-ம் ஆண்டில், ""சந்திரயான்~1'' என்னும் ஆள் இல்லாத செயற்கைக்கோளை செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இரு நவீன கருவிகளை எடுத்துச் செல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாஸô'வுக்கும் இடையே பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உடன்பாடு கையெழுத்தானது. அதில் "இஸ்ரோ' தலைவர் ஜி. மாதவன் நாயரும், இந்தியாவுக்கு வந்துள்ள "நாஸô'வின் தலைவர் மிக்கேல் கிரிபினும் கையெழுத்திட்டனர். இதன் மூலம், விண்வெளி ஆய்வில் இந்தியா, அமெரிக்கா இடையில் ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வகம், "மினி எஸ்ஏஆர்' எனப்படும் நவீன ராடார் சாதனத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகமும் "நாஸô'வின் ஆய்வகமும் இணைந்து, சந்திரனின் கனிம வளத்தைக் கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளன. அவ்விரு சாதனங்களையும் இந்தியாவின் "சந்திரயான்~1' செயற்கைக்கோளில் அனுப்பி வைக்க அந்த உடன்பாடு வகை செய்கிறது. சந்திரனின் துருவப் பகுதிகளில் பனிப்படிவம் இருக்கிறதா, சந்திரனில் புதைந்து கிடக்கும் உலோகங்கள் என்னென்ன என்பதைக் கண்டறிய அக் கருவிகள் பயன்படுத்தப்படும். அக் கருவிகள் மூலம் திரட்டப்படும் தகவல்களை இந்தியாவும் அமெரிக்காவும் பயன்படுத்திக்கொள்ளும்