Monday, March 20, 2006

வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் கணனி

ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும். இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

2 comments:

Sivabalan said...

மிக நல்ல பதிவு!! நன்றி !! நன்றி !!

Suban said...

நன்றி சிவபாலன்