Friday, February 02, 2007

குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு!!

மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள்.

ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க்கப்படும் போது, நோயாளி ஒல்லியாக இருந்தால் தாங்கும் சக்தியை இழக்கிறார். அதனால், அவருக்கு உயிரிழப்பு ஏற்புடும் அபாயமும் அதிகம்.

குண்டாக இருப்பவர், அதைத் தாங்கும் சக்தியை பெற்றிருப்பதால், அவரால் பிழைக்கும் வாய்ப்பையும் அதிகம் பெற முடிகிறது என்பது தான் இவர்களின் ஆய்வு முடிவு.

கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 10 ஆயிரம் மாரடைப்பு நோயாளிகள் விடயத்தில் இந்த வேறுபாடு பற்றி ஆராயப்பட்டது. அப்போது தான் இந்த உண்மை தெரியவந்தது. இன்னும் இதுபற்றி ஆராய வேண்டியது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, டில்லியில் உள்ள இருதய மருத்துவ நிபுணர் கே.கே. அகர்வால் கூறுகையில், `வயதானவர்களின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும் உடல் எடை, உயரம் என்பது, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேரும் போது, அவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. அவர்களுக்கு நோய்க் கோளாறுகளை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் செய்கிறது அவர்களின் தாங்கும் சக்தி என்றார். :)

நன்றி :- விடுப்பு