Wednesday, May 10, 2006

சந்திரனுக்கு செல்லும் முதலாவது இந்திய செயற்கை கோள்

சந்திரனுக்கு 2008-ம் ஆண்டில், ""சந்திரயான்~1'' என்னும் ஆள் இல்லாத செயற்கைக்கோளை செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இரு நவீன கருவிகளை எடுத்துச் செல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாஸô'வுக்கும் இடையே பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உடன்பாடு கையெழுத்தானது. அதில் "இஸ்ரோ' தலைவர் ஜி. மாதவன் நாயரும், இந்தியாவுக்கு வந்துள்ள "நாஸô'வின் தலைவர் மிக்கேல் கிரிபினும் கையெழுத்திட்டனர். இதன் மூலம், விண்வெளி ஆய்வில் இந்தியா, அமெரிக்கா இடையில் ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வகம், "மினி எஸ்ஏஆர்' எனப்படும் நவீன ராடார் சாதனத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகமும் "நாஸô'வின் ஆய்வகமும் இணைந்து, சந்திரனின் கனிம வளத்தைக் கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளன. அவ்விரு சாதனங்களையும் இந்தியாவின் "சந்திரயான்~1' செயற்கைக்கோளில் அனுப்பி வைக்க அந்த உடன்பாடு வகை செய்கிறது. சந்திரனின் துருவப் பகுதிகளில் பனிப்படிவம் இருக்கிறதா, சந்திரனில் புதைந்து கிடக்கும் உலோகங்கள் என்னென்ன என்பதைக் கண்டறிய அக் கருவிகள் பயன்படுத்தப்படும். அக் கருவிகள் மூலம் திரட்டப்படும் தகவல்களை இந்தியாவும் அமெரிக்காவும் பயன்படுத்திக்கொள்ளும்

5 comments:

b said...

சுபன் தம்பி,

நன்றாக வடிவமைத்து இருக்கிறீர்கள் வலைப்பூவை!

தொடர்ந்து எழுத அன்புடன் வாழ்த்துகிறேன்.

Suban said...

நன்றி உங்கள் வாழ்த்துக்கு

b said...

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ் ப்ளாக் போன்ற திரட்டிகளில் உங்களுடையதை இணையுங்கள் சுபன். நிறைய பேர் படிப்பார்கள்.

www.thamizmanam.com
www.thenkoodu.com
www.tamilblog.com

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் தம்பி,

உங்க வலைப்பூவில் மிகவும் உபயோகமான செய்திகள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சுபன், விக்கிபீடியாவில் உங்கள் வலைப்பதிவின் முகவரி கண்டு இங்கு வந்து பார்த்தேன்..அறிவியல் தொடர்பான விதயங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து எழுதுவதை கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வார்ப்புரு (blog template) படிக்க கண் உறுத்துகிறது. தயவு செய்து எழுத்துரு மற்றும் பின்னணி வண்ணததை மாற்றவும்.