Friday, February 02, 2007

குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு!!

மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள்.

ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க்கப்படும் போது, நோயாளி ஒல்லியாக இருந்தால் தாங்கும் சக்தியை இழக்கிறார். அதனால், அவருக்கு உயிரிழப்பு ஏற்புடும் அபாயமும் அதிகம்.

குண்டாக இருப்பவர், அதைத் தாங்கும் சக்தியை பெற்றிருப்பதால், அவரால் பிழைக்கும் வாய்ப்பையும் அதிகம் பெற முடிகிறது என்பது தான் இவர்களின் ஆய்வு முடிவு.

கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 10 ஆயிரம் மாரடைப்பு நோயாளிகள் விடயத்தில் இந்த வேறுபாடு பற்றி ஆராயப்பட்டது. அப்போது தான் இந்த உண்மை தெரியவந்தது. இன்னும் இதுபற்றி ஆராய வேண்டியது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, டில்லியில் உள்ள இருதய மருத்துவ நிபுணர் கே.கே. அகர்வால் கூறுகையில், `வயதானவர்களின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும் உடல் எடை, உயரம் என்பது, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேரும் போது, அவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. அவர்களுக்கு நோய்க் கோளாறுகளை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் செய்கிறது அவர்களின் தாங்கும் சக்தி என்றார். :)

நன்றி :- விடுப்பு

Wednesday, May 10, 2006

சந்திரனுக்கு செல்லும் முதலாவது இந்திய செயற்கை கோள்

சந்திரனுக்கு 2008-ம் ஆண்டில், ""சந்திரயான்~1'' என்னும் ஆள் இல்லாத செயற்கைக்கோளை செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இரு நவீன கருவிகளை எடுத்துச் செல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாஸô'வுக்கும் இடையே பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உடன்பாடு கையெழுத்தானது. அதில் "இஸ்ரோ' தலைவர் ஜி. மாதவன் நாயரும், இந்தியாவுக்கு வந்துள்ள "நாஸô'வின் தலைவர் மிக்கேல் கிரிபினும் கையெழுத்திட்டனர். இதன் மூலம், விண்வெளி ஆய்வில் இந்தியா, அமெரிக்கா இடையில் ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வகம், "மினி எஸ்ஏஆர்' எனப்படும் நவீன ராடார் சாதனத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகமும் "நாஸô'வின் ஆய்வகமும் இணைந்து, சந்திரனின் கனிம வளத்தைக் கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளன. அவ்விரு சாதனங்களையும் இந்தியாவின் "சந்திரயான்~1' செயற்கைக்கோளில் அனுப்பி வைக்க அந்த உடன்பாடு வகை செய்கிறது. சந்திரனின் துருவப் பகுதிகளில் பனிப்படிவம் இருக்கிறதா, சந்திரனில் புதைந்து கிடக்கும் உலோகங்கள் என்னென்ன என்பதைக் கண்டறிய அக் கருவிகள் பயன்படுத்தப்படும். அக் கருவிகள் மூலம் திரட்டப்படும் தகவல்களை இந்தியாவும் அமெரிக்காவும் பயன்படுத்திக்கொள்ளும்

Monday, March 20, 2006

பூமியின் காந்த வட துருவமும் இடம்பெயர்வும்

சான் பிரான்சிஸ்கோ, டிச. 10: பூமியின் காந்த வட துருவம் இன்னும் 50 ஆண்டுகளில் சைபீரியாவுக்கு இடம் பெயரக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காந்த துருவம் இடம் பெயர்கிறது என்பதை நீண்ட நாள்களாக விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். ஆனால் அது ஏன் இடம் பெயர்கிறது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. பூமியின் காந்த பாதுகாப்பு கவசத்தின் வலிமை கடந்த 150 ஆண்டுகளில் 10 சதவீதம் குறைந்திருப்பது முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில், காந்த வட துருவமானது ஆர்க்டிக் பகுதியில் சுமார் 1,102 கி.மீ. தொலைவுக்கு அங்கும் இங்கும் நகர்ந்து அலைந்திருக்கிறது என்கிறார் ஒரேகான் பல்கலைக்கழக புவிகாந்தவியல் நிபுணர் ஜோசப் ஸ்டோனர். இதன்படி பார்த்தால், இப்போது கனடாவின் வட பகுதியைச் சேர்ந்த அலாஸ்காவில் அமைந்துள்ள காந்த வட துருவம், இன்னும் 50 ஆண்டுகளில் சைபீரியாவுக்கு நகர்ந்து செல்லக் கூடும். அலாஸ்காவில் அமைந்துள்ள பூமியின் காந்த வட துருவப் பகுதி முதன் முதலில் 1831-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1904-ல் அப் பகுதியை விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய்ந்தபோது, அது முதலில் இருந்த இடத்தில் இருந்து 50 கி.மீ. நகர்ந்திருப்பது தெரியவந்தது.

வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் கணனி

ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும். இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

Sunday, March 19, 2006

டைட்டானிக் மூழ்கியது எப்படி??

டைட்டானிக் கப்பல்சார் விபத்துகளில் மிகவும் மோசமான விபத்துதாகும். இக்கப்பல் தனது கன்னி பயணத்தை southamton இலிருந்து new york city க்கு மேற்கொள்ளும் போது new foundland இற்கு தெற்கே 153 km தொலைவில் பனிப்பாறையுடன் மோதுண்டது. இது நடந்தது சித்திரை 14, 1912. இவ்விபத்தில் ஏறாத்தாழ 1513 பேர் இறந்தனர். இவர்களுள் அமெரிக்க கோடீஸ்வரர்களான John Jacob Astor, Benjamin Guggenheim மற்றும் Isidor Straus என்போர் அடங்குவர்.இதில் தண்ணீர் உள்புக முடியா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் இதனை மூழ்கடிக்க முடியாதென அறிவித்தனர் இருந்தாலும் பனிப்பாறை இவற்றை எல்லாம் துவம்சம் செய்து மூழ்கடிக்க முடியா கப்பலை மூன்றே மணித்தியாலத்தில் மூழ்கடித்து விட்டது. பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளில் பனிப்பாறைகள் பற்றிய எச்சரிக்கையும் மீறி கப்பல் தலைவனால் மிக விரைவாக கப்பல் செலுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் படகுகளும்(lifeboat) அங்கிருந்தவர்களுள் பாதிப்பேருக்கே போதுமானதாக இருந்தது. அருகிலிருந்தும் எந்தவொரு உதவியும் பெறமுடியவில்லை காரணம் அருகிலிருந்த californian இல் இருந்த வானொலி அலை கட்டுப்பாட்டாளர்(radio opperator) வேலையில் இல்லாமல்(off duty) உறங்கிகொண்டு இருந்தார். இவையே பின்பு கடல் வழி பிரயாணங்களின் போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகவந்தது. அத்தீர்வுகள் ஆவன:- முடிந்தவரை அனைவருக்கும் ஏற்ற மாதிரி உயிர் காக்கும் படகுகளை (lifeboat) எடுத்து வருதல்,24 மணி நேர ஆழ்கடல் அவதானிப்பு,சர்வதேச அளவில் பனிப்பாறைகள் பற்றிய அவதானிப்பு.
டைட்டானிக் 1985 இன் பின் முக்கிய விடயமாக மாறியது. காரணம் அந்த வருடம் தான் கப்பலின் உண்மையான் உடைந்த பாகங்கள் கடலின் கீழே 3800 மீற்றர்(12,000 அடி) ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல் இருந்த இடம் பிரெஞ்சு அமெரிக்க ஆய்வாளர்களால் கடலுக்கடியில் புகைப்படம் பிடிக்க கூடிய கருவிகளால் புகைப்படம் பிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் அமெரிக்க ஆய்வாளர்கள் கப்பலுக்கு அருகில் சென்று பாத்தனர். ஆனால் எதையும் மீட்கவில்லை. அதற்கு அடுத்தவருடம் பிரெஞ்சு மீட்பு குழுவினர் கப்பலில் இருந்து நகைகள்,பணம் முதலியவற்றை எடுத்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பாரிஸ் நகரில் காட்சிபடுத்தினர். கப்பலை வெளிகொண்டுவரும் முயற்சிகள் சில பல காரணங்களால் கைகூடி வரவில்லை :(


Image hosting by Photobucket

நண்பர்களுக்கு வணக்கம் :)